சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் விலை குறைந்து காணப்படுகிறது

சென்னை: சென்னை கோயம்பேடு சந்தைக்கும் வரத்து அதிகரித்தாகரணத்தால் தொடர்ந்து விலையேற்றமாக இருந்த கேரட் மற்றும் பீன்ஸ் விலை ரூ 40 குறைந்து விற்பனை ஆகிறது. கோயம்பேடு மொத விற்பனை அங்காடிக்கு காய்கறிகள் வரத்து குறைந்து இருப்பதால் கடந்த 10 நாட்களாக காய்கறி விலை உயர்ந்து கேரட் 120 ரூபாய் வரை, பீன்ஸ் 80 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.

 இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக தென்மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து கோயம்பேடு சந்தைக்கு காய்கறிகள் வரத்து அதிகரித்த காரணத்தால் தற்பொழுது விலை சற்று குறைந்துள்ளது. குறிப்பாக கேரட் மற்றும் பீன்ஸ்  விலை கணிசமாக குறைந்துள்ளது.

100 ரூபாய் முதல் 140 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட கேரட் விலை குறைந்து 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 80 ரூபாய் விற்கப்பட்ட பீன்ஸ் 40 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கோயம்பேடு சந்தைக்கு வரத்து அதிகரித்த காரணத்தால் காய்கறி விலை குறைந்த விற்பனை செய்யப்படுகிறது என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளார்.

இன்றைய நிலவரப்படி தக்காளி ஒரு கிலோ 30 ரூபாய் இருந்து 32 வரை, உருளைக்கிழங்கு 25 ரூபாய் முதல் 34 ரூபாய் வரை, சின்ன வெங்காயம் 40 முதல் 60 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இதே நிலையில் காய்கறி விலை தொடர்ந்தால் மேலும் சில நாட்களுக்கு காய்கறி விலையில் மற்றம் இருக்காது என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளார்.

Related Stories: