போலீஸ் அதிகாரிக்கு சொந்தமான விடுதியில் மாணவிகளின் குளியல் வீடியோ எடுத்த ஊழியர் கைது: சண்டிகரை போல் உ.பி-யிலும் அதிர்ச்சி

கான்பூர்: உத்தரபிரதேச போலீஸ் அதிகாரிக்கு சொந்தமான விடுதியில் படித்து வந்த மாணவிகளின் குளியல் வீடியோவை எடுத்த துப்புரவு பணியாளரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் பஞ்சாப் மாநிலம் சண்டிகர் பல்கலைக்கழக விடுதி மாணவிகள் குளிக்கும் வீடியோவை தனது சக ஆண் நண்பருக்கு பகிர்ந்த மாணவி விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்பட்டது. அதேபோன்று அதிர்ச்சியூட்டும் சம்பவம் உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் மருத்துவ தேர்வுக்கு படித்து வந்த மாணவிகளின் குளியல் வீடியோ விவகாரம் வைரலாகி வருகிறது.

குறிப்பிட்ட தனியார் விடுதியில் மாணவிகள் தங்கியிருந்த போது, அந்த விடுதியில் பணியாற்றிய ஆண் துப்புரவு பணியாளர் ஒருவர், மாணவிகள் குளிக்கும் பகுதியில் ரகசியமாக வீடியோ எடுத்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக மாணவிகள் தரப்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் அந்த துப்புரவு பணியாளரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். ஏற்கனவே குற்றம்சாட்டப்பட்ட துப்புரவு பணியாளரிடம் இருந்து அவரது செல்போனை மாணவிகள் பறித்திருந்தனர்.

அந்த செல்போனை மாணவிகள் போலீசில் ஒப்படைத்தனர். அந்த வீடியோவில் பதிவு செய்யப்பட்ட மாணவிகளின் குளியல் காட்சிகள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உத்தரபிரதேசத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவ, மாணவியர் மேற்கண்ட விடுதியில் தங்கி மருத்துவ தேர்வுக்கு படித்து வருகின்றனர்.

இந்த விடுதியானது மாநிலத்தில் கூடுதல் போலீஸ் எஸ்பியாக பணியாற்றும் ஒருவருக்கு சொந்தமானது என்று போலீசார் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து போலீஸ் ஏசிபி கல்யாண்பூர் தினேஷ் சுக்லா கூறுகையில், ‘மாணவிகளிடம் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் துப்புரவு பணியாளர் கைது செய்யப்பட்டார், தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது’ என்றார்.

Related Stories: