அமெரிக்காவை தாக்கிய அதிவேக இயன் சூறாவளி: புளோரிடாவில் 76 மாவட்டங்கள் பாதிப்பு

புளோரிடா: கியூபாவில் நேற்று கடும் சேதங்களை ஏற்படுத்திய இயன் சூறாவளி அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை தாக்கியுள்ளது. புளோரிடாவின் தென்மேற்கு கடற்கரை நகரங்களை நேற்று மாலை சக்தி வாய்ந்த சூறாவளி தாக்கியது. மையோஸ்கோட்டை மேற்குப்பகுதியில் உள்ள கேயுகோஸ்தா நகரத்தை இயன் சூறாவளி இலக்காக கொண்டிருந்தது. இதனால் பல அடி உயரத்துக்கு அலைகள் எழுந்ததால் கரையோர நகரங்களுக்குள் கடல்நீர் புகுந்தது. மணிக்கு 280 கி.மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசியதால் ஏராளமான மரங்களும், மின்கம்பங்களும் சாய்ந்தன.

பலத்த காற்று எதிரொலியாக கரையோர நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீன்பிடி படகுகள் நகரங்களுக்குள் இழுத்து வரப்பட்டன. சூறாவளியால் காப்பர் சிட்டியில் உள்ள விமான நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த விமான நிலையங்கள் சேதம் அடைந்துள்ளன. ஏராளமான சிறியவகை விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி தலைகுப்பர கவிழ்ந்து கிடக்கின்றன. இயன் சூறாவளி தாக்கத்தை காணொளியில் பதிவு செய்ய முயன்ற அமெரிக்காவின் பிரபல வானிலை அறிவிப்பாளர் ஜிம் காண்டோர் புயலில் இழுத்து செல்லப்படும்  காட்சி பதைப்பதைக்க வைப்பதாக இருந்தது.

ஜிம் சூறாவளியில் சிக்கி தத்தளிக்கும் காட்சி அதன் தாக்கத்தை உணர்த்துவதாக இருந்தது. இயன் சூறாவளி புளோரிடா மாகாணத்தில் மட்டும் 67 மாவட்டங்களில் பெருமளவில் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. மின்கம்பம்ங்கள் சாய்ந்ததால் 2 லட்சம் வீடுகள் இருளில் மூழ்கி இருக்கின்றன. தொலைத்தொடர்பு தடங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. சுமார் ஒன்றரஒஇ மணி நேரத்திற்கு பிறகு இயன் சூறாவளி சற்று வலுவிழந்து புளோரிடா மாகாணத்திற்கு தெற்கே குண்டார்குர்டா துறைமுகம் நகரை நோக்கி நகர்ந்தது. இயன் சூறாவளி எதிரொலியாக புளோரிடா மாநிலம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது.

இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மார்பளவு வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்களை காவல்துறையினர் படகுகள் மீட்டு நிவாரண முகாம்களுக்கு மாற்றி வருகின்றனர். அமெரிக்கா பேரிடர் மேளான்மை துறையினர் போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளை மேற்கொண்டுவருகின்றனர். இதனிடையே 23 பேருடன் சென்ற படகு ஒன்று புளோரிடா அருகே கடலில் முழ்கியது. இது குறித்து புகாரை அடுத்து கடலோர காவல் படை அதிகாரிகள் ஹெலிகாப்டர்கள் மூலம் காணாமல் போன படகினை தேடி வருகின்றனர்.

Related Stories: