இந்தியா, பாக். இரண்டுமே எங்களின் நட்பு நாடுகள்: ஜெய்சங்கருக்கு அமெரிக்கா பதில்

வாஷிங்டன்: ‘இந்தியா, பாகிஸ்தான் இரண்டுமே எங்களின் முக்கியத்துவம் வாய்ந்த நட்பு நாடுகளே’ என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு அமெரிக்கா பதிலளித்துள்ளது. பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அளித்துள்ள எப்-16 போர் விமானத்தை நவீனப்படுத்துவதற்கு நிதி உதவி வழங்க அதிபர் பைடன் நிர்வாகம் சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. இது, தீவிரவாதத்தை ஒடுக்குவதற்கான நடவடிக்கை என்று அமெரிக்கா விளக்கமளித்தது. தற்போது, அமெரிக்கா சென்றுள்ள வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர்,  ‘தீவிரவாதத்தை

ஒடுக்குவதற்காக என சொல்லி யாரையும் முட்டாளாக்க முடியாது’ என காட்டமாக கருத்து தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக, நேற்று நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய அமெரிக்க வெளியுறவு துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ், ‘‘இந்தியா, பாகிஸ்தான் இரு நாடுகளுடனான எங்கள் உறவை நாங்கள் இணைத்துப் பார்க்க விரும்பவில்லை.  இரு நாடுகளுடனான எங்களின் உறவு தனித்துவமானது. இருநாட்டுடனும் நாங்கள் வளங்களையும், தகவல்களையும் பரிமாறிக் கொள்ள விரும்புகிறோம்’’ என்றார்.

Related Stories: