தஞ்சை பெரியகோவில் வளாகத்தில் அனைத்து வகையான கலை ஆட்டம்

தஞ்சை: தஞ்சாவூரில் தமிழ்நாடு அரசு சுற்றுலா துறை சார்பில் நேற்று தஞ்சை பெரியகோவில் வளாகத்தில் மாவட்ட ஆட்சி தலைவர் அறிவுறுத்தல்படி அனைத்து வகையான கலை ஆட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் தப்பு ஆட்டம், பறை ஆட்டம், புலியாட்டம், கொம்பு ஆட்டம், நையாண்டி மேளம், கும்மி கோலாட்டம், மயில் ஆட்டம், பொய் கால் குதிரை ஆட்டம், கரகாட்டம், ஒயில் ஆட்டம், பம்பை ஆட்டம், கட்டை கால் ஆட்டம், காளி ஆட்டம், தேவர் ஆட்டம், தப்பாட்டம், சிலம்பாட்டம், துடுப்பாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்நிகழ்வில் தஞ்சை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, சுற்றுலா துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

Related Stories: