உளுந்தூர்பேட்டை அருகே பாமாயில் ஏற்றி சென்ற லாரி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து; ஆறாக ஓடிய பாமாயில்

உளுந்தூர்பேட்டை: சென்னை மணலியில் இருந்து 40 டன் பாமாயில் ஏற்றிக் கொண்டு ஒரு லாரி சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை முருகேசன் (48) என்பவர் ஓட்டிச் சென்றார். இன்று காலை கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த செம்பியன்மாதேவி என்ற இடம் அருகே லாரி சென்று கொண்டிருந்தபோது, திடீரென நிலை தடுமாறி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரியை ஓட்டி சென்ற டிரைவர் முருகேசன் லேசான காயத்துடன் உயிர்தப்பினர். லாரியிலிருந்து வெளியேறிய பாமாயிலை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் வாளி மற்றும் கேன்களில் பிடித்து சென்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற எலவனாசூர்கோட்டை காவல் நிலைய போலீசார் அவர்களை விரட்டிவிட்டு ஊழியர்கள் மூலம் உடைப்பை சரி செய்தனர். இருப்பினும் சுமார் 2 டன் அளவிற்கு பாமாயில் டேங்கரிலிருந்து வெளியேறி ஆறாக ஓடியது. இதனை தொடர்ந்து இரண்டு கிரேன்கள் மூலம் விபத்துக்குள்ளான லாரியை மீட்கும் பணியில் ஈடுபட்டு

வருகின்றனர்.இந்த விபத்து குறித்து எலவனாசூர்கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர். லாரியை மீட்கும் போது உளுந்தூர்பேட்டை- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Related Stories: