மத்திய அமெரிக்க நாடான கவுதமாலாவில் சாலையில் திடீர் பள்ளம்: காருக்குள் சிக்கிய 4 பேர் உயிருடன் மீட்பு; 3 பேர் படுகாயம்

வாசிங்டன் : மத்திய அமெரிக்க நாடான கவுதமாலாவில் சாலையில் திடீரென ஏற்பட்ட பிரமாண்ட பள்ளத்தில் சாலையில் சென்றுகொண்டிருந்த கார்கள் விழுந்ததில் 3 பேர் படுகாயமடைந்தனர். கவுத்தமாலா என்ற இடத்தில் கார் உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்லும் பரபரப்பான சாலையில் திடீரென பிரமாண்ட பள்ளங்கள் ஏற்பட்டன. எவரும் எதிர்பாராத வகையில் போக்குவரத்து நிறைந்த சாலையில் பிரமாண்ட பள்ளங்கள் ஏற்பட்டதால் சாலையில் சென்று கொண்டிருந்த கார்கள் அதில் விழுந்தன.

சுமார் 50 அடி பள்ளத்தில் பயணித்துக்கொண்டிருந்த கார்கள் அதே வேகத்தில் விழுந்ததால் பெரும் பரபரப்பு நிலவியது. இதையடுத்து, உடனடியாக பள்ளத்தில் விழுந்த கார்களில் சிக்கியவர்களை மீட்க விரைந்த மீட்பு படையினர் காருக்குள் சிக்கிய 4 பேரை உயிருடன் மீட்டனர். மேலும், இருவர் சிக்கியுள்ளதாக கூறப்படும் நிலையில் அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து வருகிறது. கவுதமாலாவில் பருவ மழை பெய்து வருவதால் பள்ளம் ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.     

Related Stories: