பிரபல கொள்ளையனிடம் 3 நாள் காவலில் விசாரணை: 15 சவரன் மீட்பு

அண்ணாநகர்: வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் சிவவிநாயகம் (41), பிரபல கொள்ளையன். இவர், மீது விருகம்பாக்கம் நொளம்பூர் உட்பட்ட பல்வேறு காவல் நிலையங்களில் சுமார் 7க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குள் நிலுவையில் உள்ளன.  விருகம்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை திருடிய வழக்கில் கடந்த 4ம் தேதி, விருகம்பாக்கம் போலீசார், இவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் கடந்த 23ம் தேதி அம்பத்தூர் நீதிமன்றத்தில் சிவ விநாயகத்தை 3 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி பெற்றனர். அதன்படி விசாரணை நடத்தி, இவரது கூட்டாளிகள் யார், திருட்டு நகைகளை எங்கு விற்பார், கொள்ளையடிக்க திட்டமிடுவது எப்படி என விசாரணை நடத்தினர். மேலும், சிவ விநாயகம் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 15 சவரன் நகையை மீட்டனர். பின்னர், அவரை மீண்டும் சிறையில் அடைத்தனர்.

Related Stories: