அனிருத்தின் தாத்தா இசையமைப்பாளர் எஸ்.வி.ரமணன் மரணம்

சென்னை: இசையமைப்பாளரும், இயக்குனருமான எஸ்.வி. ரமணன் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 87. தொலைக்காட்சி, வானொலி, விளம்பரம், திரைப்படம் என அனைத்து துறைகளிலும் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர் எஸ்.வி. ரமணன். ரேடியோ விளம்பரங்களில் பல புதுமைகளை புகுத்திய இவர் ஆயிரக்கணக்கான வானொலி விளம்பரங்களுக்கு தனது குரல் மூலம் அழகு சேர்த்துள்ளார். ஆன்மிகம் சம்பந்தப்பட்ட ஆவண படங்களை தயாரித்த இவர், ரமண மகரிஷி, சீரடி சாய்பாபா ஆகிய ஆன்மிக ஞானிகள் பற்றிய ஆவணப் படங்கள் இயக்கி, பெரும் வரவேற்பை பெற்றார்.

ஒய்.ஜி.மகேந்திரன், சுஹாசினி நடித்த உறவுகள் மாறலாம் என்ற படத்துக்கு இசையமைத்து, இயக்கினார். இவர் மக்கள் தொடர்பு கலையில் செய்த சாதனைகளுக்காக டாக்டர் பட்டம் பெற்றவர். இந்நிலையில் சென்னை ஆர்.ஏ.புரத்தில் வசித்து வந்த எஸ்.வி. ரமணன் வயது மூப்பு காரணமாக நேற்று காலமானார். இவர் பிரபல இயக்குனர் கே.சுப்ரமணியத்தின் மகன். இசையமைப்பாளர் அனிருத்தின் தாத்தா என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: