வீடியோ, போட்டோ லீக் செய்தால்... சூர்யா திடீர் எச்சரிக்கை

சென்னை: தனது படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோவையோ வீடியோவையோ லீக் செய்தால் சட்டப்படி நடவடிக்கை பாயும் என நடிகர் சூர்யா தரப்பு எச்சரித்துள்ளது. பெரிய பட்ஜெட்டில் உருவாகும் படங்களின் ஷூட்டிங் ஸ்பாட் படங்கள் ரகசியமாக வைக்கப்படும். படம் ரிலீசாகும் நேரத்தில்தான் இந்த புகைப்படங்கள் தயாரிப்பு தரப்பால் வெளியிடப்படும். சில சமயம், படம் வெளியாகும் வரையும் வெளியிடாமல் சஸ்பென்ஸ் வைப்பார்கள். காரணம், கதையின் தன்மை ரசிகர்களுக்கு தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக. இந்நிலையில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு பிறகு இதுபோல் ஷூட்டிங் ஸ்பாட் படங்கள் லீக் ஆவது இப்போது சாதாரணமாகிவிட்டது. சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் படங்களும் இதுபோல் லீக் ஆனது.

இந்நிலையில் இது தொடர்பாக சூர்யா தரப்பிலிருந்து படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா வெளியிட்ட அறிக்கை: எங்கள் தயாரிப்பு திரைப்படமான ’சூர்யா 42’ படப்பிடிப்பு தளங்களில் இருந்து வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பகிர்வதை நாங்கள் கவனித்து வருகிறோம். நாங்கள் செய்யும் ஒவ்வொரு வேலையும் ரத்தம் மற்றும் வியர்வையை உள்ளடக்கியது. இந்த படத்தை அனைவருக்கும் திரையரங்குகளில் பிரமாண்டமான அனுபவமாக தர விரும்புகிறோம். எனவே வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை நீங்கள் வெளியிட்டு இருந்தால் அதை உடனடியாக நீக்க வேண்டும். எதிர்காலத்திலும் அதை பகிர வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். தொடர்ந்து வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியிடுபவர்கள் மீது உரிமை மீறல் தடைசட்டத்தின் கீழ் சட்டப்படிகடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறுஅதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: