கோலாலம்பூரில் இருந்து வந்த தலைமறைவு குற்றவாளி சென்னையில் சிக்கினார்

சென்னை: கோலாலம்பூரில் இருந்து நேற்று சென்னைக்கு பயணிகள் விமானம் நேற்று முன்தினம் வந்தது. அதில் வந்த பயணிகளின் பாஸ்போர்ட் ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் சோதித்தனர். அதில், அரியானா மாநிலத்தை சேர்ந்த மன்பிரீத்சிங் (30) என்பவரும் வந்திருந்தார். இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. பல இடங்களில் தேடியும், கடந்த 6 மாதங்களாக தலைமறைவாக இருந்து வந்துள்ளார். இதைத் தொடர்ந்து, அவரை தேடப்படும் குற்றவாளியாக அரியானா போலீசார் அறிவித்தனர். மேலும், அனைத்து முக்கிய விமான நிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. அவரது பாஸ்போர்ட்டை பரிசோதித்தபோது, மன்பிரீத்சிங் என உறுதி செய்யப்பட்டது. அவரை மடக்கிப்பிடித்து, விமான நிலைய போலீசில் ஒப்படைத்தனர்.

Related Stories: