அம்மன் தாலியை திருடிய 2 பேர் கைது

திருவொற்றியூர்: மணலி பாரதியார் தெருவில் உள்ள சிவன் கோயிலின் உட்புறத்தில் உள்ள திருவுடைநாயகி அம்மன் சிலை கழுத்தில் கிடந்த தாலியை நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் யாரோ திருடி சென்றுவிட்டனர். இதுபற்றி மணலி காவல் நிலையத்தில் பூசாரி புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து கோயிலின் அருகே பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சி பதிவுகளை ஆய்வு செய்து அதே பகுதியை சேர்ந்த தேவேந்திர பிரசாத் (26), ஜான் சாலமன் (41) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

Related Stories: