பெற்றோர், சகோதரனை கொன்ற வழக்கு மகன், மருமகளுக்கு விதித்த தூக்கு ரத்து

சென்னை: திண்டிவனம், காவேரிப்பாக்கத்தை சேர்ந்த ராஜு-கலைச்செல்வி தம்பதிக்கு கோவர்த்தனன், கவுதமன் என்ற மகன்கள் உள்ளனர். புதிய தொழில் தொடங்க பணம் கொடுக்காததால் பெற்றோர் மற்றும் சகோதரன் மீது கோவர்த்தனன் கோபத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் 2019 மே 15ம் தேதி ராஜு, கலைச்செல்வி, கவுதமன் ஆகியோர் எரிந்த நிலையில் இறந்து கிடந்தனர். ஆனால், புகார் கொடுத்தவர்கள் மீதே போலீசார் கொலை வழக்குபதிந்தனர். வழக்கில்  பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம், கோவர்த்தனன் மற்றும் தீபகாயத்ரிக்கு மரணதண்டனை விதித்தது. தண்டனையை எதிர்த்து இருவரும் மேல் முறையீடு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுதாரரின் வாதத்தை ஏற்று 2 பேருக்கு விதித்த மரண தண்டனையை ரத்து செய்து தீர்ப்பளித்தனர்.

Related Stories: