புழல்: புழல், காவாங்கரை, கன்னடபாளையம், கதிர்வேடு, எம்ஜிஆர் நகர், கலெக்டர் நகர், புத்தகரம், சூரப்பட்டு, சண்முகபுரம், லட்சுமிபுரம், ரெட்டேரி, கடப்பா சாலை உள்பட பல்வேறு பகுதிகளில் மாநகராட்சி சார்பில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இரும்பு பைப்பிலான நவீன தெரு பெயர் பலகைகள் பொருத்தப்பட்டன. நாளடைவில் சிலர், இந்த தெரு பலகைகளில் போஸ்டர் ஒட்டியும் உடைத்தும் நாசமாக்கினர். தற்போது மேற்கண்ட வார்டு பகுதிகளில் உள்ள அனைத்து தெரு பெயர் பலகைகளும் காணாமல் போய்விட்டன.
