லண்டனில் 4 நாளில் இங்கிலாந்து ராணிக்கு 2.5 லட்சம் பேர் அஞ்சலி

லண்டன்: மறைந்த இங்கிலாந்து ராணி 2ம் எலிசபெத் உடலுக்கு 2.50 லட்சம் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தியுள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

மறைந்த இங்கிலாந்து ராணி 2ம் எலிசபெத் உடல், 10 நாள் அஞ்சலிக்குப் பின் லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபேவில் அரச மரியாதையுடன் கணவர் இளவரசர் பிலிப் உடல் அருகே நேற்று முன்தினம் நல்லடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக அவரது உடல் ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் அரண்மனையில் இருந்து கொண்டு வரப்பட்டு, லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் ஹாலில் பொது மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டு இருந்தது. புதன் கிழமை இரவு முதல் திங்களன்று காலை 6.30 மணி வரை ராணி 2ம் எலிசபெத் உடலுக்கு 24 மணி நேரமும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

இதற்காக, நாடாளுமன்றத்தில் இருந்து தேம்ஸ் நதியின் தென்கரை, டவர் பிரிட்ஜ் முதல் சவுத்வார்க் பார்க் வரை பொதுமக்களின் வரிசை நீண்டு இருந்தது.  

இது குறித்து அந்நாட்டின் கலாச்சார துறை அமைச்சர் மிசெல்லே ேடானேலான் கூறுகையில், ‘‘சுமார் இரண்டரை லட்சம் பேர் நாடாளுமன்றம் வழியாக சென்று அஞ்சலி செலுத்தினர். இது தோராயமான எண்ணிக்கை மட்டும் தான். இந்த எண்ணிக்கை இன்னும் இறுதி செய்யப்படவில்லை’’ என்றார். லண்டனின் மேயர் அலுவலகம் கூறுகையில், ‘‘ஹைட் பார்க்கில் 80 ஆயிரம் பேர், சடங்கை பார்க்கும் பகுதியில் 75 ஆயிரம் பேர்,  ராணியின் உடலை எடுத்து செல்லும்போது 60 ஆயிரம் பேர் அஞ்சலி செலுத்தினர்’’ என குறிப்பிட்டுள்ளது.

Related Stories: