கப்பல் பழுதானதால் ஊழியர்களை கைவிட்ட பிரிட்டன் நிறுவனம்.. 8 இந்தியர்கள் உள்ளிட்ட 11 மாலுமிகள் 45 நாட்களாக உணவு, குடிநீர் இல்லாமல் தவிப்பு

அபுதாபி: ஐக்கிய அரபு அமீரகத்தில் நிறுத்தப்பட்டு இருக்கும் பழுதான கப்பலில் 45 நாட்களாக உணவு, குடிநீர் இன்றி தவிக்கும் தங்களை காப்பாற்று மாறு இந்தியர்கள் உள்ளிட்ட 11 மாலுமிகள் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள். பிரிட்டன் உரிமையாளருக்கு சொந்தமான சரக்கு கப்பல் ஏப்ரல் 5ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள கோர் துறைமுகத்திற்கு வந்தது. கப்பலில் 8 இந்தியர்கள், 2 இந்தோனேசியர்கள், 1 சிரியர் உட்பட மொத்தம் 11 பணியாளர்கள் இருந்தனர். மிக பழையமான அந்த கப்பலில் ஏற்பட்ட பழுதின் காரணமாக அதன் இயக்கம் முற்றிலுமாக தடைப்பட்டது. 45 நாட்களாக மாலுமிகள் மேற்கொண்டு வரும் பழுது நீக்க முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை.

மோட்டார், ஜெனரேட்டர், தகவல் தொடர்பு சாதனம் என எதுவும் வேலை செய்யவில்லை. கப்பலில் போதுமான உணவு, குடிநீர் இல்லாததால் நங்கூரமிடப்பட்ட கப்பலில் மாலுமிகள் சிக்கி தவிக்கின்றனர். அவர்களுக்கு தேவையான அவசர உதவிகளை செய்ய பிரிட்டன் கப்பல் நிறுவனம் மறுத்துவிட்ட நிலையில், தங்களை பணியமர்த்திய ஒப்பந்த நிறுவனமும் ஊதியம் தராமல் கை விரித்து விட்டதாக மாலுமிகள் கூறுகின்றனர். அவர்களின் பரிதாப நிலையை கண்டு கோர் ஃபஹான் துறைமுக ஊழியர்கள் உணவு வழங்கி வருகின்றனர். இந்த விவகாரத்தில் இந்தியா, இந்தோனேசிய அரசு தலையிட்டு தங்களை உடனடியாக மீட்க வேண்டும் என்று கப்பல் கேப்டன் நிக்கில் கோரிக்கை வைத்துள்ளார்.

The post கப்பல் பழுதானதால் ஊழியர்களை கைவிட்ட பிரிட்டன் நிறுவனம்.. 8 இந்தியர்கள் உள்ளிட்ட 11 மாலுமிகள் 45 நாட்களாக உணவு, குடிநீர் இல்லாமல் தவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: