நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் அண்ணா பல்கலையுடன் ஒப்பந்தம்

சென்னை: தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. வாரிய மேலாண்மை இயக்குநர் ம.கோவிந்த ராவ் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. வாரியத்தினால் மேற்கொள்ளப்படும் கட்டுமானப் பணிகளின் தரத்தினை பல்வேறு நிலைகளில் உறுதி செய்ய சம்மந்தப்பட்ட மண்டலங்களில் உள்ள புகழ்பெற்ற தொழில்நுட்ப கல்லூரிகளான சென்னை ஐஐடி, தேசிய தொழில்நுட்பக் கழகம், திருச்சி, சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் இதர அரசு பொறியியல் நிறுவனங்களை மூன்றாம் தரக்கட்டுப்பாடு குழுவாக நியமனம் செய்திட வாரியத்தால் முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் மூன்றாம் தரப்பு தரக்கட்டுப்பாடு முகமையாக, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் வாரிய மேற்பார்வை பொறியாளர் ச.சுந்தரமூர்த்தி, நிர்வாக பொறியாளர்கள் ரவிச்சந்திரன்உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: