கனியாமூர் பள்ளி கலவர விவகாரம் சிலிண்டர் திருடிய வாலிபர் கைது: வீடியோ பதிவுடன் சிறப்பு புலனாய்வு பிரிவு அதிரடி

சென்னை: கனியாமூர் பள்ளியை சேதப்படுத்தியதுடன், அங்கிருந்த காஸ் சிலிண்டரை திருடிச் சென்ற வாலிபரை சிறப்பு புலனாய்வு பிரிவினர் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கனியாமூர் கிராம தனியார் பள்ளிமாணவி மதி மர்மமான முறையில் கடந்த ஜூலை 13ம் தேதி உயிரிழந்தார். மாணவியின் இறப்பில் மர்மம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர் மாணவியின் உடலை வாங்க மறுத்து கடந்த ஜூலை 17ம் தேதி பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க கோரி நடைபெற்ற போராட்டம் வன்முறையில் முடிந்தது.

இதில் மாணவி மதி படித்த பள்ளி மற்றும் பள்ளி வாகனங்கள் அனைத்தும் தீவைத்து சூறையாடப்பட்டது. கலவரத்தை தடுக்க முயன்ற டிஐஜி பாண்டியன் உட்பட 52 போலீசார் படுகாயமடைந்தனர். பின்னர் மதி மர்ம மரணம் குறித்து பள்ளி தாளாளர் உட்பட 5 பேர் மீது சின்ன சேலம் போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர். மேலும், பள்ளியை சேதப்படுத்தியது தொடர்பாக சின்ன சேலம் போலீசார் தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பள்ளியை சேதப்படுத்தியது தொடர்பாக சின்னசேலம் போலீசார் தனியாக வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.

பள்ளியை தீ வைத்து சேதப்படுத்திய குற்றவாளிகளை கைது ெசய்ய தமிழக அரசு உத்தரவுப்படி டிஐஜி தலைமையில் 80க்கும் ேமற்பட்ட போலீசார் கொண்ட சிறப்பு புலனாய்வு பிரிவு அமைக்கப்பட்டது. சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார், கலவரத்தின்போது எடுத்த வீடியோ ஆதாரங்களின்படி இதுவரை 300க்கும் மேற்பட்டோரை கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், சிறப்பு புலனாய்வு பிரிவு டிஎஸ்பி தலைமையிலான குழு பள்ளியின் சொத்துக்களை சேதப்படுத்தியதோடு மட்டுமல்லாமல் காஸ் சிலிண்டரை எடுத்து சென்ற கள்ளக்குறிச்சி மாவட்டம் பொற்படாகுறிச்சி கிராமத்தை ராஜா(30) என்பவரை வீடியோ பதிவை அடிப்படையில் நேற்று முன்தினம் கைது செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மேலும் பலரை சிறப்பு புலனாய்வு பிரிவு அதிகாரிகள் செல்போன் சிக்னல் மற்றும் வீடியோ பதிவுகளை வைத்து தொடர்ந்து தேடி வருகின்றனர்.

Related Stories: