பாக். கிரிக்கெட் வாரியம் மீது அப்ரிடி பாய்ச்சல்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஷாகின் ஷா அப்ரிடி, முழங்கால் காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். இதற்காக லண்டன் சென்று அவர் சிகிச்சை பெற்றார். இந்நிலையில் லண்டனில் சிகிச்சை பெற்றதற்கான செலவை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஏற்க மறுத்துவிட்டது. இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மீது ஷாகின் ஷாவின் மாமனாரும், முன்னாள் கேப்டனுமான சாகித் அப்ரிடி சாடி உள்ளார்.

அவர் உங்கள் பிரீமியம் வேகப்பந்து வீச்சாளர். பாகிஸ்தானுக்காக விளையாடும்போது அவருக்கு காயம் ஏற்பட்டது. காயமடைந்த வீரரைக் கவனிப்பது பிசிபியின் கடமையல்லவா என அப்ரிடி தெரிவித்துள்ளார். இதனிடையே டி.20 உலக கோப்பைக்காக அணியில் ஷாகின் ஷா அப்ரிடி சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: