கூகுள், மெட்டாவுக்கு ரூ.572 கோடி அபராதம்: தென்கொரியா அதிரடி

சியோல்: கூகுள், மெட்டா நிறுவனங்கள் அமெரிக்காவின் மிக பெரிய தொழில்நுட்ப  நிறுவனங்கள். தென் கொரிய செல்போன் சந்தையில் கூகுள் நிறுவனம் மிக பெரிய ஆதிக்கம் செலுத்துகிறது. அதை தவறாக பயன்படுத்தியதாக கூறி கடந்த ஆண்டு தென் கொரிய வர்த்தக ஒழுங்குமுறை ஆணையம் கூகுளுக்கு அபராதம் விதித்தது. கூகுள், மெட்டா ஆகியவை  விளம்பர நோக்கங்களுக்காக தங்கள் பயனர்களின் தனிப்பட்ட தரவுகளை, அவர்களின் அனுமதியின்றி பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது பற்றி விசாரித்த தென் கொரிய அரசின் தனிநபர் தகவல்கள் மற்றும் பாதுகாப்பு ஆணையம், கூகுளுக்கு ரூ.398 கோடியும், மெட்டாவுக்கு ரூ.175 கோடியும் என மொத்தம் ரூ.572 கோடி அபராதம் விதித்துள்ளது. தென்கொரியாவில் கூகளைப் பயன்படுத்திய 82 சதவீதத்தினரும்,  மெட்டாவைப் பயன்படுத்திய 98 சதவீதத்தினரும்  தங்களின் தனிப்பட்ட விவரங்கள் கசிவதை அறிந்திருக்கவில்லை என்று அந்நாட்டு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories: