ரகசியம் காக்கும் வகையை சேர்ந்தது அக்னிபாதை திட்டம்; ஆர்டிஐ.க்குள் வராது: ராணுவம் அதிர்ச்சி தகவல்

புதுடெல்லி: ‘அக்னிபாதை திட்டம் தகவல் உரிமை சட்ட வரம்புக்குள் வராது. அது ரகசியம்’ என்று தகவல் அறியும் உரிமை மனு நிராகரிக்கப்பட்டது, அதிர்ச்சியை அளித்துள்ளது. ராணுவத்தின் முப்படைகளுக்கும் 4 மாத குறுகிய கால ஒப்பந்தப் பணிக்கு, அக்னி வீரர்கள் என்ற பெயரில் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இதற்கான திட்டத்தை பலத்த எதிர்ப்புகளுக்கு இடையே, சில மாதங்களுக்கு முன் ஒன்றிய அரசு அமல்படுத்தியது.

இந்நிலையில், அக்னிபாதை திட்டம் தகவல் அறியும் உரிமை சட்டத்துக்குள் (ஆர்டிஐ) வராது என்ற அதிர்ச்சி தகவல் அம்பலமாகி இருக்கிறது.  மகாராஷ்டிரா மாநிலம், புனேவைச் சேர்ந்த தகவல் அறியும் உரிமை  ஆர்வலர் விகார் துர்வே, அக்னிபாதை திட்டத்தின் கீழ் பணியில் சேர்க்கப்படுவர்களின் பணிக்காலம், ஊதிய தொகுப்பு, படிகள்  குறித்த விவரங்களை கேட்டு, தகவல் உரிமை சட்டத்தின்படி மனு சமர்ப்பித்தார்.  அதற்கு பதில் அளித்துள்ள ராணுவ  தகவல் அதிகாரி, ‘அக்னி பாதை திட்டம் பற்றிய தகவல்களை அளிக்க முடியாது. இந்த திட்டம் ரகசிய காக்கும் வகையில் இடம் பெற்றுள்ளது,’ என கூறப்பட்டு, அவருடைய மனு நிராகரிக்கப்பட்டு உள்ளது.

Related Stories: