பிப்லப்புக்கு புதிய பதவி ‘பாஜ தாஜா’

புதுடெல்லி:  திரிபுராவில் பாஜ ஆட்சி நடக்கிறது. இதன் முதல்வராக இருந்த பிப்லப் குமார் தேவ், கட்சி மேலிடத்தின் அதிருப்தியை பெற்றதால் கடந்த மே மாதம் தலைமை உத்தரவுப்படி பதவி விலகினார். அவருக்கு பதிலாக, பாஜ.வின் மாநிலங்களவை உறுப்பினராக இருந்த மாணிக் சாஹா புதிய முதல்வராக பதவியேற்றார். இதைத் தொடர்ந்து, அவர் வகித்து வந்த மாநிலங்களவை எம்பி பதவிக்கான இடம் காலியாக இருந்தது. இப்பதவிக்கு வரும் 22ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இந்நிலையில், இந்த பதவிக்கான தனது கட்சி வேட்பாளராக பிப்லப் குமார் தேவ்வை பாஜ மேலிடம் நேற்று அறிவித்தது. இம்மாநிலத்தில் அடுத்தாண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடக்கிறது. இதனால், அவரை திருப்தி செய்யவும், கட்சியில் தொடர்ந்து உத்வேகத்துடன் பணியாற்றவும் இந்த வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், அரியானா பாஜ பொறுப்பாளராகவும் அவர் நியமிக்கப்பட்டு உள்ளார்.

Related Stories: