பூண்டி ஏரியில் சிறுவன் சடலம் மீட்பு: கொலையா? போலீசார் விசாரணை

ஊத்துக்கோட்டை: பூண்டி ஏரியில் மிதந்த சிறுவன் உடலை கைப்பற்றிய போலீசார்,  யாராவது கொலை செய்து வீசினார்களா என்று விசாரணை நடத்தி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே பூண்டி ஏரியில் ஒரு சடலம் மிதப்பதாக பென்னலூர்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்அடிப்படையில், எஸ்ஐ பிரதாபன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பூண்டி ஏரியில் மிதந்த சிறுவன் உடலை மீட்டனர். அந்த சிறுவனுக்கு சுமார் 13 வயது இருக்கும் என்று தெரிகிறது. ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவன் என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சிமென்ட் கலர் டி சர்ட், நீல நிற கால்சட்டை அணிந்துள்ளான். இதையடுத்து சிறுவன் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுபற்றி பென்னலூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்….

The post பூண்டி ஏரியில் சிறுவன் சடலம் மீட்பு: கொலையா? போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: