நகை, துணிக்கடைகளில் நெரிசலை பயன்படுத்தி நகர் முழுவதும் தொடர் திருட்டு; ம.பி. கொள்ளைக்காரிகள் கைது: பல மாநிலங்களில் கைவரிசை அம்பலம்

 

சென்னை, ஜூலை 30: சென்னை முழுவதும் பல்வேறு பகுதிகளில் நகைக்கடை, துணிக்கடைகளில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த மத்தியபிரதேசத்தை ேசர்ந்த பிரபல கொள்ளைக்காரிகள் 3 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை தரமணியை சேர்ந்தவர் பிரியா(29). இவர் கடந்த 25ம் ேததி மாலை தனது கணவருடன் தி.நகர் உஸ்மான் சாலையில் உள்ள நகைக்கடையில் 24 கிராம் தங்க நகையை வாங்கிகொண்டு, தன்னிடம் இருந்த 1 சவரன் நகை என மொத்தம் 4 சவரன் நகையை பையில் வைத்துள்ளார். அப்போது புதிய நகை வாங்கியதற்கான பரிசு பொருட்கள் வாங்கிய பிறகு தனது பையை பார்த்தபோது, அதில் வைத்திருந்த 4 சவரன் நகை மாயமாகி இருந்தது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பிரியா மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதேபோல் செங்கல்பட்டு மாவட்டம் சித்தாலப்பாக்கத்தை சேர்ந்த நடராசா கிருபானந்தன் என்பவர் கடந்த 25ம் ேததி தி.நகரில் உள்ள புடவைக்கடையில் துணி வாங்கி கொண்டு, கடையின் கீழ் தளத்தில் வந்து பார்த்தபோது, அவரது பையில் வைத்திருந்த பிரான்சு நாட்டின் வங்கி அட்ைட மற்றம் இந்திய பணம் ரூ.75 ஆயிரம் மாயமாகி இருந்தது. இதுகுறித்து நடராசா கிருபானந்தன் மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த இரண்டு புகார்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் நகை மற்றும் பணம் திருடப்பட்ட கடைகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, இரண்டு திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது 3 பெண்கள் என தெரியவந்தது.

அதைதொடர்ந்து போலீசார் 3 கொள்ளைக்காரிகளின் புகைப்படங்களை வைத்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் மத்தியபிரதேச மாநிலம் ராஜ்கர் மாவட்டம் கூல்கேடி கிராமத்தை சேர்ந்த லஷ்மிபாய்(40), மீனாட்சி(35), குஷ்பூ(40) என தெரியவந்தது. இவர்கள் 3 பேரும் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கைவரிசை காட்டி வந்ததும், இவர்கள் மீது ஐதராபாத், பெங்களூரு, சென்னையிலும் திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரிய வந்தது. மேலும் இதில் லஷ்மிபாய் இந்த கொள்ளை கூட்டத்திற்கு தலைமை தாங்கி நடத்தி வந்ததும், திருடிய நகை மற்றும் பணத்தை பங்கு பிரித்து கொண்டதும் தெரியவந்தது.

லஷ்மிபாய் மீது ஒரு கொலை முயற்சி உட்பட 5 வழக்குகளும், மீனாட்சி மற்றும் குஷ்பூ மீது தலா 4 குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும், இவர்கள் சென்னையில் குரோம்பேட்டை, தி.நகர், பாண்டி பஜார், புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் கைவரிசை காட்டி வந்ததும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் 3 கொள்ளைக்காரிகளை நேற்று முன்தினம் அதிரடியாக கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.6.44 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து தங்க நகைகள் குறித்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Related Stories: