தாம்பரம், ஆக.1: குரோம்பேட்டை நியூ காலனி 2வது பிரதான சாலையில் உள்ள ஒரு வீட்டில் சட்டவிரோதமாக சூதாட்டம் கிளப் நடத்தி வருவதாக குரோம்பேட்டை காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், குரோம்பேட்டை காவல் நிலைய போலீசார் அந்த வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த சுமார் 34 பேரை கைது செய்தனர். சூதாட்டத்திற்கு வைத்திருந்த ரூ.9 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
விசாரணையில், சூதாட்டம் நடத்தியது ரங்கா(36) என்பதும் சூதாட்டத்திற்கு உடந்தையாக மூன்று பேர் செயல்பட்டு வந்ததும் தெரியவந்தது. பிடிபட்ட நபர்களில் ரங்காவைத் தவிர மற்ற அனைவரும் சூதாட்டம் விளையாட வந்தவர்கள் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் ரங்கா மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய 3 பேரை தேடி வருகின்றனர்.
