நீடாமங்கலம் பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மையில் இயற்கை உரம் தயாரிப்பு: விவசாயிகள், பொதுமக்கள் வரவேற்பு

நீடாமங்கலம்: நீடாமங்கலம் பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மையில் இயற்கை உரம் தயாரிப்புக்கு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வரவேற்பு அளித்துள்ளனர். திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளது. இந்த பேரூராட்சி பகுதிக்கு உட்பட்டது இனாம் கொத்தமங்கலம், பரப்பனாமேடு, பழைய நீடாமங்கலம் உள்ளிட்ட மூன்றுக்கு மேற்பட்ட கிராமங்களை உள்ளடக்கிய பகுதியாகும். இங்கு திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை வெகு சிறப்பாக நடைமுறைப்படுத்தி வருகிறார்கள்.

தமிழக அரசின் பிளாஸ்டிக் ஒழிப்பு திட்டத்தின் கீழ் மீண்டும் மஞ்சப்பை என்ற திட்டத்தை தீவிரமாக அமல்படுத்தும் வகையில் பகுதியில் விற்பனையை கீழ் கொண்டு விற்பனை செய்வதை முற்றிலுமாக தடுத்துள்ளனர். இந்நிலையில் பேரூராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை மக்கும் என தரம் பிரித்து மக்கும் குப்பைகளை 120 நாள் வரை பாத்தி அமைத்து காற்றோட்டமாக மக்க வைத்து இயற்கை காய்கறி உரம் தயாரிக்கப்படுகிறது. சாணம் மற்றும் கரும்புச்சக்கை கொண்டு இயற்கையான மண்புழு உரம் தயாரிக்கப்படுகிறது.

மேலும் மக்கும் குப்பைகளிலிருந்து இயற்கை உரம் தயாரிக்கப்பட்டு நாள் ஒன்றுக்கு 150 கிலோ மக்கும் குப்பையை உற்பத்தி செய்கிறார்கள். உற்பத்தி செய்யும் மண்புழு உரம் மற்றும் இயற்கை உரங்களை சந்தைப்படுத்தும் வகையில் விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள். மண்புழு உரம் கிலோ ரூபாய் 10க்கும் இயற்கை உரம் கிலோ ரூபாய் 5க்கும் விற்பனை செய்து வருகிறார்கள். நீடாமங்கலம் பேரூராட்சியில் தூய்மை பணியாளர்கள் மூலமாக வீடு வீடாக சென்று குப்பைகளை தரம் பிரித்து சேகரிக்கப்படும் குப்பைகளை சிறப்பான முறையில் சுகாதாரத்துறை பிரிவு திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் குப்பைகள் இருந்து இயற்கை உரங்களை தயாரிக்கும் பணி மேற்கொண்டு வருகிறது.

இந்த பணிகளில் 8 நிரந்தர தூய்மை பணியாளர்கள், 15 க்கும் மேற்பட்ட சுய உதவிக் குழுவை சேர்ந்த தூய்மை பணியாளர்களை கொண்டு இப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இயற்கையாக தயாரிக்கப்பட்ட உரத்தை ஏராளமான விவசாயிகள் பெற்றுக்கொண்டு தங்களின் விளை நிலங்களுக்கு பயன்படுத்தி வருகின்றனர். இயற்கை உரத்தைப் பெற்ற விவசாயிகள் நீடாமங்கலம் பேரூராட்சியில் உற்பத்தி செய்யப்படும் இயற்கை உரங்கள் தங்களின் விளைச்சலுக்கு பெருந்துணையாக உள்ளது என மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர்.நீடாமங்கலம் பேரூராட்சியில் இயற்கை மற்றும் மண்புழு உரத்தை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் சந்தைப்படுத்துவதில் முனைப்பு காட்ட இயற்கை விவசாய ஆர்வலர்கள் தங்களின் விருப்பத்தை தெரிவித்து வருகின்றனர்.

தமிழக அரசின் முதன்மை திட்டமான பிளாஸ்டிக் ஒழிப்பு மீண்டும் மஞ்சப்பைத் திட்டத்தின் மூலம் நீடாமங்கலம் பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் சிறப்பு பெற்று விளங்குகிறது.நீடாமங்கலம் முதல் நிலை பேரூராட்சி தலைவர் ராமராஜ், செயல் அலுவலர் பரமேஸ்வரி, தூய்மை பணி மேற்பார்வையாளர் அசோகன் மற்றும் மன்ற உறுப்பினர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் ஒத்துழைப்போடு பணிநடை பெறுகிறது. இதனை விவசாயிகள் பொதுமக்கள் வரவேற்றுள்ளனர்.

Related Stories: