கந்தர்வகோட்டை- பட்டுக்கோட்டை சாலையில் வேகத்தடையில் வெள்ளை வர்ணம் அழிந்ததால் அடிக்கடி விபத்து-நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கந்தர்வகோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையிலிருந்து பட்டுக்கோட்டை செல்லும் சாலைகள் விரிவாக்க பணிகள் தற்சமயம் நடைபெற்று, புதிய சாலைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகள் மீது ஒளிரும் வண்ணமோ, அருகில் வேகத்தடை இருப்பதற்கான விளம்பர பலகையோ இல்லாமல் இருக்கின்றது. இதனால் இந்த சாலையில் செல்வோருக்கு வேகத்தடை இருப்பது தெரியாமல் வேகத்தடை மீது வாகனங்கள் ஏறி நிலை தடுமாறி கீழே விழும் நிலை இருந்து வருகிறது.

இந்த சாலையில் சமீபத்தில் கந்தர்வகோட்டை ஒன்றியம்,வேம்பன்பட்டி கிராமத்தில் உள்ள அரசுபள்ளிக்கு எதிரே இருக்கும் வேகத்தடை தெரியாமல் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர் கீழே விழுந்து சிகிச்சை பலனின்றி இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை துறையினர் விரைந்து வேகத்தடைகளுக்கு ஒளிரும் வண்ணங்கள் அடித்தும், எச்சரிக்கை பலகை வைத்தும் விபத்து ஏற்படாமல் தடுக்குமாறு வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: