கேரளாவில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடரும் கனமழை!: பல இடங்களில் நிலச்சரிவு.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை..!!

திருவனந்தபுரம்: கேரளாவில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக கோழிக்கோடு அருகே மலையின் ஒரு பகுதி சரிந்து விழும் பரபரப்பு காட்சி வெளியாகியுள்ளது. பத்தனம்திட்டா, இடுக்கி, கோட்டையம், கோழிக்கோடு, கண்ணூர், வயநாடு ஆகிய மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் காட்டாறுகளில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள மரிப்புழா மலைப்பகுதியில் நேற்று மாலை சுமார் ஒரு மணி நேரம் கனமழை கொட்டியது.

இதனால் மலையின் ஒருபகுதியை சரிந்து விழுந்தது. அப்போது எடுக்கப்பட்ட நிலம் சரியும் காட்சிகள், இணையத்தில் அதிகளவு பகிரப்பட்டு வருகிறது. நிலச்சரிவு ஏற்பட்டுள்ள பகுதி மக்கள் அதிகம் வசிக்காத பகுதி என்பதால் பெருமளவு சேதங்கள் ஏற்படவில்லை. கேரளாவில் மழை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மரிப்புழா ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளார்கள்.

Related Stories: