ஊட்டி டேவிஸ் பூங்கா சீரமைப்பு பணி தீவிரம்-பொதுமக்கள், சுற்றுலா ஆர்வலர்கள் மகிழ்ச்சி

ஊட்டி : ஊட்டி நகராட்சிக்குட்பட்ட டேவிஸ் பூங்கா சீரமைக்கும் பணிகள் நடந்து வரும் நிலையில், சுற்றுலா ஆர்வலர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஊட்டி  நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்னர் பல்வேறு  சிறிய பூங்காக்கள் அமைக்கப்பட்டது. ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில்  இப்பூங்காக்கள் துவக்கப்பட்டது. தொடர்ந்து பல ஆண்டுகளாக இந்த பூங்காக்களை  நகராட்சி நிர்வாகம் பராமரித்து வந்தது. ஆனால், இடையில் பல ஆண்டுகள்  இப்பூங்காக்களை பராமரிக்கப்படாத நிலையில், அனைத்து பூங்காக்களும்  புதர்மண்டி சமூக வீரோதிகளின் கூடாரமாக மாறியது. இதனை தொடர்ந்து  இப்பூங்காக்களை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சுற்றுச்சூழல்  ஆர்வலர்கள் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்  பூங்காக்கள் அனைத்தும் பொலிவுப்படுத்தப்பட்டன.

ஆனால், கடந்த அதிமுக.,  ஆட்சியின் போது, 10 ஆண்டுகளும் இந்த பூங்காக்களை பராமரிக்காமல்  விடப்பட்டது. இதனால், அனைத்து பூங்காக்களும் பொலிவிழந்து காணப்படுகிறது.  குறிப்பாக, கலெக்டர் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ள டேவிஸ் பூங்கா முற்றிலும்  பராமரிப்பின்றி காடாக மாறியது. இதனால், இது சமூக விரோதிகளின் கூடாரமாக  மாறியது. மேலும், கால்நடைகளின் மேய்ச்சல் நிலமாக மாறியது. எனவே,  இப்பூங்காவை சீரமைக்க வேண்டும் என தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் சுற்றுலா  ஆர்வலர்கள் வலியுறுத்தி வந்தனர்.

இதனை தொடர்ந்து, இப்பூங்காவை சீரமைக்க  நகராட்சி நிர்வாகம் முன் வந்தது. இப்பூங்காவை சீரமைக்க தற்போது ரூ.9 லட்சம்  ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், பூங்காவில் உள்ள புதர்கள் அகற்றப்பட்டு  சீரமைக்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. மேலும்,  பூங்காவை சுற்றிலும் கான்கிரீட் சுவர்கள் அமைக்கும் பணிகளும்  துவக்கப்பட்டுள்ளது. ஒரு மாத்திற்குள் இப்பணிகள் முடிக்கப்பட்டு  இப்பூங்காவை காண உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் செல்ல  அனுமதிக்கப்படும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.  இதனால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Related Stories: