போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ள குருவிகுளம்-கழுகுமலை சாலை சீரமைக்கப்படுமா?

பொதுமக்கள் எதிர்பார்ப்பு

திருவேங்கடம் : போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ள குருவிகுளத்தில் இருந்து கழுகுமலை செல்லும் சாலையை சீரமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குருவிகுளத்தில் இருந்து அத்திப்பட்டி, ராமலிங்கபுரம் வழியாக கழுகுமலை வரை சுமார் 3 கிலோமீட்டர் சாலை மட்டும் தான். ஆனால், குருவிகுளத்தில் இருந்து ஆலங்குளம் வழியாக கழுகுமலை வரை சுமார் 8 கிலோமீட்டர் தூரம் கொண்ட சாலை உள்ளது.

எனவே விவசாய பொருட்கள் வாங்குவதற்காகவும், பணி நிமித்தமாகவும், வங்கிகள், மொத்த காய்கறி கடைகள், மருத்துவமனைகள் போன்ற பல்வேறு காரணங்களுக்காக குருவிகுளம், ராமலிங்கபுரம், அத்திப்பட்டி மக்கள், அரசு, தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளும் இந்த சாலையை பயன்படுத்தி கழுகுமலை சென்று வருகின்றனர்.

ஆனால், இந்த சாலையை போக்குவரத்து லாயக்கற்ற நிலையில் பல இடங்களில் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால், சைக்கிள், பைக்கில் செல்லும் போது கீழே விழுந்து காயம் அடைகின்றனர். இந்த சாலையை சீரமைக்க கோரி அத்திப்பட்டி பஞ்சாயத்து தலைவர் செல்வக்கனி மாரியப்பன், ராமலிங்கபுரம் பஞ்சாயத்து தலைவர் சரஸ்வதி ஆகியோர் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தார். ஆனால், அதன் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறுப்படுகிறது. எனவே போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் காணப்படும் இந்த சாலையை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை  விடுத்துள்ளனர்.

Related Stories: