ஜெனிலியாவுக்கு சொகுசு கார் பரிசளித்த கணவர்

மும்பை: தமிழில் ‘பாய்ஸ்’, ‘சச்சின்’, ‘சந்தோஷ் சுப்ரமணியம்’, ‘உத்தமபுத்திரன்’, ‘வேலாயுதம்’ போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்தவர், ஜெனிலியா. இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி ஆகிய மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ள அவர், 10 வருடங்களுக்கு முன்பு மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக்மகனும், நடிகருமான ரித்தேஷ் தேஷ்முக்கை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

முழுமையான குடும்ப வாழ்க் கையில் செட்டிலாகிவிட்ட பிறகு சினிமாவை விட்டு விலகியிருந்த ஜெனிலியா, தற்போது கன்னடப் படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்நிலையில், விநாயகர் சதுர்த்தி பரிசாக, ஜெனிலியாவுக்கு ரித்தேஷ் தேஷ்முக் பிஎம்டபிள்யூ சொகுசு கார் பரிசளித்துள்ளார். இதன் மதிப்பு ஒரு கோடியே 40 லட்சம் ரூபாய் என்று கூறப்படுகிறது.

Related Stories: