உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நாளை மறுதினம் முதல் விசாரணை நீதிபதிகள் மாற்றம்; மூன்று மாதத்திற்கு ஒரு முறை மாற்றப்படுவது வழக்கம்

மதுரை: ஐகோர்ட் மதுரை கிளையில் செப்டம்பர் 5ம் தேதி முதல் விசாரணை நீதிபதிகள் மாற்றப்பட்டுள்ளனர். ஐகோர்ட் மதுரை கிளையில் மூன்று மாதத்திற்கு ஒரு முறை வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் மாற்றப்படுவது வழக்கம். அந்த வகையில் செப். 5 முதல் வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் விபரம் வெளியிடப்பட்டுள்ளது. நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்யநாராயண பிரசாத் ஆகியோர் பொதுநல மனுக்கள், 2018ம் ஆண்டு முதலான ரிட் அப்பீல் மனுக்கள் மற்றும் குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு மனுக்களை விசாரிப்பர். நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, என்.ஆனந்த்வெங்கடேஷ் ஆகியோர் ஆட்கொணர்வு மனு, குற்றவியல் அப்பீல் மனு, 2017ம் ஆண்டு வரையிலான ரிட் அப்பீல் மனுக்களை விசாரிப்பர். நீதிபதி என்.சேஷசாயி, 2016ம் ஆண்டு வரையிலான இரண்டாம் அப்பீல் மனுக்களையும், நீதிபதி வி.பவானி சுப்பராயன், கனிமவளம், நிலசீர்திருத்தம், நில எடுப்பு, ஆர்டிஐ மற்றும் தியாகிகள் பென்ஷன் தொடர்பான ரிட் மனுக்களை விசாரிப்பர். நீதிபதி ஆர்.தாரணி, ஜாமீன் மற்றும் முன்ஜாமீன் மனுக்களை விசாரிப்பார்.

நீதிபதி பி.புகழேந்தி, 2017ம் ஆண்டு முதலான இரண்டாம் அப்பீல் மனுக்கள் மற்றும் சிவில் சீராய்வு மனுக்களை விசாரிப்பார். நீதிபதி ஏ.ஏ.நக்கீரன், 2020ம் ஆண்டு வரையிலான சிவில் துணை மனுக்கள் மற்றும் சிவில் துணை இரண்டாம் அப்பீல் மனுக்களை விசாரிப்பார். நீதிபதி ஜி.இளங்கோவன், சிபிஐ மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை தொடர்பான மனுக்களை விசாரிப்பார். நீதிபதி சத்திகுமார் சுகுமாறா குரூப் 2020ம் ஆண்டு முதலான போலீசாருக்கு உத்தரவிட கோரும் குற்றவியல் மற்றும் ரிட் மனுக்களை விசாரிப்பார். நீதிபதி கே.முரளிசங்கர், முதல் அப்பீல், 2021ம் ஆண்டு முதலான சிவில் துணை மனுக்கள் மற்றும் சிவில் துணை இரண்டாம் அப்பீல் மனுக்களை விசாரிப்பார். நீதிபதி எஸ்.ஸ்ரீமதி, 2017ம் ஆண்டு வரையிலான தொழிலாளர் மற்றும் பணியாளர்கள் தொடர்பான மனுக்களையும், நீதிபதி ஆர்.விஜயகுமார், 2016ம் ஆண்டு வரையிலான கனிமவளம், நில எடுப்பு தொடர்பான ரிட் மனுக்களையும், நீதிபதி முகம்மது ஷபீக், மோட்டார் வாகன வரி, ஏற்றுமதி, இறக்குமதி, சுங்கம் மற்றும் கலால், வனத்துறை, அறநிலையத்துறை மற்றும் வக்பு வாரியம் தொடர்பான மனுக்களை விசாரிப்பர்.

Related Stories: