பேருந்துக்கு அடியில் படுத்து வரமறுத்த ஆசாமி: கள்ளக்குறிச்சியில் பரபரப்பு

சங்கராபுரம்: கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள பலாப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி மகன் கலியமூர்த்தி (40). இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால் இவரை, அவரது மனைவி சங்கராபுரத்தில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளார். திடீரென மனைவியின் கையை உதறித் தள்ளிவிட்டு திருவண்ணாமலை பகுதியில் இருந்து சங்கராபுரம் நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பேருந்தின் முன் பாய்ந்து படுத்துக்கொண்டார். அதிர்ச்சியடைந்த ஓட்டுநர் உடனடியாக பேருந்தை நிறுத்தி விட்டார்.

இதனால் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார். பின்னர் அவர் பேருந்துக்கு அடியில் போய் படுத்துக் கொண்டார். இதனை தொடர்ந்து  உடனடியாக சங்கராபுரம் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு 10க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பேருந்து அடியில் இருந்த கலியமூர்த்தியை பத்திரமாக மீட்டனர். இதனால் திருவண்ணாமலை-கள்ளக்குறிச்சி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: