ஒன்பது வயது சிறுமி தசைசிதைவு நோயால் பாதிப்பு-மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க மனு

காரைக்கால் : இருபது வயது முதல் 40 வயது வரையிலானவர்களை மயோடானிக் தசைநார் நோய் தாக்குகிறது.  சில அரிதான நேரங்களில் இது வயது வந்தோரைத்தாக்கும். தசைசுருக்கம், தசைசீரழிவு மற்றும் தசைவலுவிழப்பு உள்ளிட்டவை நோயின் அறிகுறியாகும். தற்போது இந்த தசைசிதைவு நோயால் காரைக்காலில் ஒன்பது வயது பள்ளி மாணவி பாதிக்கப்பட்டுள்ளார். காரைக்கால் அடுத்த பட்டினச்சேரி மீனவ கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ்(31). இவரது மனைவி அமலா(28). சதீஷ் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.

சதீஷ் மற்றும் அமலா தம்பதியினருக்கு  இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.  இதில் முதல் பெண் குழந்தை நதீனா(9), திருப்பட்டினம் அரசு பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறார்.

நதினாவுக்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு  கால்களால் நடக்க முடியவில்லை. மருத்துவரை சந்தித்தபோது, சிறுமி  தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறினார்.

காரைக்கால், புதுச்சேரி மற்றும் சென்னை உள்ளிட்ட ஊர்களில் பல்வேறு தனியார் மற்றும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்தும் சரி செய்ய முடியவில்லை. இதுவரை மருத்துவ செலவுக்காக ரூ.15 லட்சதுக்கு மேல் செலவு செய்துள்ளார்.

மேல் சிகிச்சைக்காக உயர்தர மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை செய்வதற்கு போதிய  பணம் இல்லாததால் புதுச்சேரி அரசிடம் நிதி உதவி கேட்டு கலெக்டர் முகமது மன்சூரிடம் பெற்றோர் கண்ணீர் மல்க கோரிக்கை மனு அளித்தனர்.மனுவை ஏற்றுக்கொண்ட ஆட்சியர் இது தொடர்பாக முதலமைச்சர் மற்றும் மருத்துவர்களிடம் பேசி   நடவடிக்கை எடுப்பதாக உறுதி

அளித்தார். இதுகுறித்து பெற்றோர் கூறுகையில், தசை சிதைவு நோயால் இரண்டு கால்கள் செயலிழந்து போனதால் நதீனா  பள்ளிக்கு செல்ல சிரமமாக உள்ளதாகவும், அரசு அல்லது தனியார் யாரேனும் உதவி செய்து  பள்ளிக்கு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர்.

ஊசிக்கு ₹16 கோடி தேவை

நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தையின் உடலில் இல்லாத மரபணுவை ஊசியின் மூலம் செலுத்த வேண்டும். அமெரிக்காவில் தயாராகும் இந்த மருந்தின் விலை ரூ.16 கோடி. இந்த மருந்தை இறக்குமதி செய்ய வரிவிதிக்கப்படுவதால் மேலும் பல கோடிகள் செலவாகும் என்பதாலும் குழந்தைக்கு இரண்டு வயது பூர்த்தி ஆவதற்குள் மரபணு ஊசி செலுத்தாவிடில் குழந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் கலக்கத்தில் உள்ளனர்.

Related Stories: