தகுதியுள்ள மாற்றுத்திறனாளிக்கு முன்னுரிமை அடிப்படையில் வீடு ஒதுக்கீடு

சென்னை: கிராமம் மற்றும் நகரங்களில் வறுமைக்கோட்டிற்கு கீழ் தகுதியுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வீடு ஒதுக்கீடு செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அரசு செயலாளர் இரா.ஆனந்தகுமார் நேற்று வெளியிட்டுள்ள அரசாணையில் கூறி இருப்பதாவது: வறுமை கோட்டிற்கு கீழ் தகுதியுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலமாக வீடு ஒதுக்கீடு செய்யப்படுவதை கண்காணிப்பது தொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் அறிவுறுத்தப்படுகிறார். மொத்த ஒதுக்கீட்டில் 5 சதவிகித இடஒதுக்கீடு இவர்களுக்கு வழங்கப்படும். அடுக்குமாடி குடியிருப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு தரைத்தள குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: