புதுப்பட்டினம் அரசு மேல்நிலை பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள்

திருக்கழுக்குன்றம்: புதுப்பட்டினத்தில் இயங்கி வரும் அரசினர் மேல்நிலை பள்ளியில் படிக்கும்  மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா  சைக்கிள்கள் வழங்கும் விழா நடந்தது. கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினத்தில் அரசினர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு, படிக்கும் மாணவ-மாணவியர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. இந்த விழாவிற்கு பள்ளியின் தலைமையாசிரியர் ஸ்ரீ வித்யா தலைமை தாங்கினார். பள்ளியின் பெற்றோர் - ஆசிரியர் கழக பொருளாளர் தாஜுதீன், வாயலூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கிங் உசேன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துக் கொண்ட செய்யூர் எம்எல்ஏ பனையூர் பாபு, மணப்பாறை எம்எல்ஏ அப்துல் சமது ஆகியோர் 240 மாணவ - மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கி சிறப்புரையாற்றினர். திருக்கழுக்குன்றம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் சரவணன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அப்துல் மாலிக், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கல்பாக்கம் ஆதவன், மாவட்ட அமைப்பாளர் தயாளன், ஒன்றிய செயலாளர் மணவாளன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: