தீவிரவாத தடுப்பு வழக்கில் சிக்கிய இம்ரானுக்கு செப். 12 வரை ஜாமீன் நீடிப்பு; பாகிஸ்தான் கோர்ட் உத்தரவு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (பிடிஐ) கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான இம்ரான் கான் கடந்த ஆக. 20ம் தேதி நடந்த கூட்டத்தில் பேசும்போது, மூத்த போலீஸ் அதிகாரிகள் மற்றும் நீதித்துறையினருக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார். அதையடுத்து அவர் மீது பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குபதியப்பட்டது. தொடர்ந்து அவரது வீட்டை காவல்துறை சுற்றிவளைத்தது.

எந்த நேரத்திலும் அவர் கைது செய்யப்படலாம் என்று தகவல்கள் கூறின. கடந்த ஆகஸ்ட் 25ம் தேதி நடந்த நீதிமன்ற விசாரணையில், இம்ரான் கானுக்கு செப். 1ம் தேதி வரை நீதிபதி ராஜா ஜவத் அப்பாஸ் ஹாசன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். செப். 1ம் தேதி (நேற்று) நடக்கும் வழக்குவிசாரணையின் போது நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகுமாறு நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில் நேற்று நடந்த நீதிமன்ற விசாரணையின் போது வரும் 12ம் தேதி வரை இம்ரான் கானுக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

Related Stories: