தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு மதரசா பள்ளி இடிப்பு: அசாமில் அதிரடி

கவுகாத்தி: தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருந்ததாக அசாமில் செயல்பட்டு வந்த மதரசா பள்ளி இடிக்கப்பட்டது. அல்-கொய்தா, அன்சாருல் பங்களா தீம் என்ற ஆகிய தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக, அசாம் மாநிலம், போங்கைகான் மாவட்டத்தில் உள்ள மதரசா பள்ளியின் ஆசிரியர் ஒருவர் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். விசாரணையில், அன்சாருல் பங்களா அணியின் 2 வங்கதேச தீவிரவாத அமைப்பின் ஆதரவாளர்களுக்கு இவர் கடந்த 4 ஆண்டுகளாக அடைக்கலம் கொடுத்தது வந்தது தெரியவந்தது. இதையடுத்து,  வங்கதேசத்தை சேர்ந்த தீவிரவாத ஆதரவாளர், மதரசாவின் முதல்வர்,  மற்றொரு நபரை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில், இந்த மதரசா வளாகத்தில் தீவிரவாத நடவடிக்கைகளை மேற்கொண்டதை தொடர்ந்து, 2 மாடிகள் கொண்ட அந்த கட்டிடத்தை அதிகாரிகள் நேற்று இடித்து தள்ளினர். அசாம் முதல்வர் ஹிமந்த் பிஸ்வா சர்மா சமீபத்தில் அளித்த பேட்டியில், ‘தீவிரவாத நடவடிக்கைகளின் மையமாக அசாம் மாறி வருகிறது’ என்று கவலை தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளை முடுக்கி விட்டார். அதன் பேரில், கடந்த மார்ச் முதல் இதுவரையில் தீவிரவாதத்துடன் தொடர்புடைய 40க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories: