நொய்டா இரட்டை கோபுரம் தரைமட்டம் உயரமான கட்டிடங்கள் இடிப்பு பட்டியலில் இணைந்தது இந்தியா

நொய்டா: நொய்டாவின் இரட்டை கட்டிடங்களை இடித்து தரைமட்டமாக்கியதன் மூலமாக 100 மீட்டர் உயர கட்டிடங்கள் இடிப்பு நாடுகளின் பட்டியலில் இந்தியா இணைந்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம், நொய்டாவில் எமரால்டு கோர்ட் வளாகத்தில் சூப்பர் டெக் நிறுவனம் 40 மாடிகள் கொண்ட இரட்டை கோபுர அடுக்குமாடி குடியிருப்பை கட்டியிருந்தது. இந்த கட்டிடம் விதிமுறைகளை மீறியதாக கட்டப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து 3,700 கிலோ வெடிமருந்தை பயன்படுத்தி நேற்று முன்தினம் இந்த கட்டிடம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. மும்பையை சேர்ந்த எடிபைஸ் என்ற நிறுவனம் கட்டிடத்தை இடிக்கும் பணியை மேற்கொண்டது.

இந்த இரட்டை கட்டிடங்களை இடித்து  தரைமட்டமாக்கியதன் மூலமாக 100 மீட்டருக்கும் அதிகமான உயரமுள்ள கட்டிடங்களை இடித்து தரைமட்டமாக்கிய நாடுகளின் பட்டியலில் இந்தியா இணைந்துள்ளது. இதுகுறித்து தென்னாப்பிரிக்காவின் ஜெட் டெமாலிசன்ஸ் நிறுவனத்தை சேர்ந்த ஜோ பிரிங்மேன் கூறுகையில், ‘‘இந்தியா மற்றும் எடிபைஸ் ஆகியவை தற்போது 100 மீட்டருக்கும் அதிகமான உயரமுள்ள கட்டிடங்களை இடித்து தரைமட்டமாக்கிய நாடுகளின் கிளப்பில் இணைந்துள்ளன. அதுவும் இந்த கட்டிடங்கள் குடியிருப்புக்கு மிக அருகில் இருந்தன. இந்த திட்டம் மிகவும் சவாலானதாகும். அனைத்து பாராட்டுக்களும் முழு குழுவினருக்கும் உரியது’’ என்றார்.

Related Stories: