பாரம்பரிய விளையாட்டு, கலை நிகழ்ச்சிகளுடன் வீதி திருவிழா: கொரட்டூர் கிழக்கு அவென்யூ சாலையில் இன்று நடக்கிறது

சென்னை: கொரட்டூர் கிழக்கு அவென்யூ சாலையில் இன்று வீதி திருவிழா நடைபெறுகிறது.சென்னை மாநகராட்சி மற்றும் ஆவடி காவல்துறை சார்பில், செய்தியாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில், கூடுதல் காவல் ஆணையர் விஜயலட்சுமி கூறுகையில், ‘‘பொதுமக்களுக்கு பொழுதுபோக்கு மற்றும் சுகாதார நடவடிக்கைகளுக்கு திறந்தவெளி உடற்பயிற்சியின் முன் முயற்சியின் ஒரு பகுதியாக ஆவடி காவல் ஆணையரகம், சென்னை மாநகராட்சியுடன் இணைந்து 28ம் தேதி (இன்று) காலை 6 மணி முதல் 10 மணி வரை கொரட்டூர் கிழக்கு அவென்யூ சாலையில் வீதி திருவிழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி தொடர்ந்து 5 வாரங்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும்.

பாரம்பரிய விளையாட்டுகளான பல்லாங்குழி, பரமபதம், தட்டாங்கால் மற்றும் தாயபாசம், சதுரங்கம், கேரம் போர்டு, ஸ்கிப்பிங், பலூன் ஷூட்டிங், ரிங் த்ரோயிங், நேச்சுரல் கிரைன்ஸ் புட், ஆவின் பூத், வாட்டர் கேன், கோவில்பட்டி புட் வெரைட்டிஸ், சுகர் கேன் ஜூஸ், கோகனட் வாட்டர் ஷாப், சாப்ட் ட்ரிங்க்ஸ் அண்ட் கனபாலா சாங், டவுன்லோடிங் செல்போன் ஆப் (போலீஸ் ஹெல்ப்), போலீஸ் சரிமோனியல் காட், போலீஸ் கன்ட்ரோல் ரூம், டேக்கிங் போட்டோ அண்ட் கிவ் இட் இன் பைவ் மினிட்ஸ், காமெடி ஆக்டர், ட்ரோன் கேமரா அரேஞ்ச்மென்ட், மொபைல் டாய்லெட் அரேஞ்சிங், ஈஸ்ட் அவென்யூ ரோட் வில் பி கிளியர் வித் கார்ப்பரேஷன் அபிஷியல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் திட்டம் இடப்பட்டுள்ளது.

இதனிடையே, பொதுமக்கள் சாலையை போக்குவரத்து இடையூறு இல்லாமல் பயன்படுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மகிழ்ச்சி எங்கள் வீட்டிற்கு அருகில்  என்கிற நிகழ்ச்சியின் கீழ் பொதுமக்கள் தங்கள் நண்பர்கள் மற்றும் அவர்களது அன்புக்குரியவர்களுடன் சேர்ந்து விளையாடி கொண்டாடுங்கள் என ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் கூடுதல் காவல் ஆணையர் விஜயலட்சுமி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: