எழும்பூர் எம்எல்ஏ பரந்தாமனுக்கு மானுடத்தின் பெருமை விருது கோலாலம்பூரில் வழங்கப்பட்டது

சென்னை: மானுடத்தின் பெருமை விருது எழும்பூர் எம்.எல்.ஏ. பரந்தாமனுக்கு கோலாலம்பூரில் வழங்கப்பட்டது. டேக்  கேர் இன்டர்நேஷனல் பவுண்டேஷன் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் குடிமக்கள் கவுரவமான, மகிழ்ச்சி நிறைந்த, நல்லதொரு வாழ்க்கையை நடத்துவதற்கான சேவைகளை  ஆற்றி வருகிறது. இந்த அமைப்பு ஆண்டுதோறும் மானுட வளர்ச்சிக்காகத் தன்னலம்  கருதாது சேவை செய்து வரும் பிரமுகர்களை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு  மானுடத்தின் பெருமை என்ற பெயரில் விருது வழங்கிக் கவுரவித்து வருகிறது.

அந்த வகையில்,  2022ம் ஆண்டுக்கான மானுடத்தின் பெருமை விருது, எழும்பூர் தொகுதி எம்எல்ஏவும், திமுக சட்டத்துறை  இணைச் செயலாளருமான வழக்கறிஞர் பரந்தாமன், தனது தொகுதி மக்களுக்கு  ஆற்றிவரும் சேவைகளின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, எழும்பூர் ரயில் நிலையம் அருகிலுள்ள காந்தி இர்வின் சாலையில் வீடு இல்லாமல் நடைபாதையில் வசித்து வந்த 59 குடும்பங்களுக்கு, தான் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட 6 மாதங்களுக்குள்ளாகவே, தான் அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வித‍த்தில், அந்த குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும் சென்னை, புளியந்தோப்பு கே.பி.பார்க்-தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட  மேம்பாட்டு வாரியக் குடியிருப்பில் வீடு ஒதுக்கி குடியமர்த்தி, அவர்களின்  துயரத்தை போக்கியதன் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு  இந்த விருது நேற்று மலேசிய நாட்டின் தலைநகர் கோலாலம்பூரில், ராயல் சுலான்  எனுமிடத்தில் நடந்த விழாவில் வழங்கப்பட்டது.     

Related Stories: