ஆம்பூரில் ஃபரிதா குழுமத்துக்கு சொந்தமான 10க்கும் மேற்பட்ட தோல், காலணி ஆலைகளில் 3வது நாளாக ஐடி சோதனை..!!

திருப்பத்தூர்: ஆம்பூரில் ஃபரிதா குழுமத்துக்கு சொந்தமான 10க்கும் மேற்பட்ட தோல், காலணி ஆலைகளில் 3வது நாளாக ஐடி சோதனை நடைபெற்று வருகிறது. திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரில் ஃபரிதா குழுமத்திற்கு சொந்தமான தோல் உற்பத்தி தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. இந்த குழுமத்திற்கு சொந்தமான நிறுவனங்களில் பெருமளவு வரிஏய்ப்பு நடந்திருப்பதாக புகார்கள் எழுந்தன. இதைத்தொடர்ந்து ஆம்பூர் மற்றும் பல்வேறு பகுதிகளில் உள்ள ஃபரிதா குழுமத்திற்கு சொந்தமான நிறுவனங்களில் 2 நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் நடந்த சோதனையில் பதிவேடுகள், கணக்கு விவரங்கள் மற்றும் ஆவணங்களை ஆய்வு செய்தனர். இந்நிலையில் 3வது நாளாக இன்றும் ஐடி சோதனை நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு முழுவதும் 60 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கே.எச். குழுமம் மற்றும் ஃபரிதா குழுமத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் ஆயிரம் விளக்கு, சென்னீர்குப்பம் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது. நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் உள்ள கே.எச். குழுமத்துக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை பெரியமேடு பெரியண்ண மேஸ்திரி தெருவில் உள்ள ஃபரிதா காலணி தொழிற்சாலையிலும் வருமானவரி சோதனை நடந்து வருகிறது.

Related Stories: