அகஸ்தியர் அருவியில் ஒரேநாளில் ரூ.85 ஆயிரம் வசூல்

விகேபுரம்: அகஸ்தியர் அருவியில் கடந்த 21ம்தேதி (ஞாயிறு) ஒரே நாளில் மட்டும் ரூ.85 ஆயிரம் வசூலானது. பாபநாசம் மேற்குத்தொடர்ச்சி மலையில் பிரசித்திபெற்ற அகஸ்தியர் அருவியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.  தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்து குளித்து மகிழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்று கிழமை வரை 3  நாட்கள் அரசு விடுமுறை தினம் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் அகஸ்தியர் அருவியை  நோக்கி படையெடுத்தனர்.

குறிப்பாக கடந்த ஞாயிற்று கிழமை  அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருகை தந்து அருவியில் ஆனந்த குளியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில்,  கடந்த 21ம்தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஒரே நாளில் அகஸ்தியர் அருவிக்கு வாகனங்கள் மற்றும் பெரியவர்கள், குழந்தைகள் ஆகியோரிடம் நுழைவு கட்டணமாக ரூ.74 ஆயிரத்து 880ம், கேன்டீன் ரூ.10 ஆயிரம் மற்றும் கயல் பூங்கா மூலமாக ரூ.680 என மொத்தம் ரூ.85,615 வசூலாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஒரு நபர் குளிப்பதற்கு ரூ.30, வாகனங்களுக்கு ரூ.50 முதல் ரூ.100 வரை வசூலிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Related Stories: