விதிகளை மீறிய ஆம்னி பஸ்களுக்கு ரூ.9.65 லட்சம் அபராதம்: அதிகாரி தகவல்

சென்னை: விதிமீறி இயக்கப்பட்ட ஆம்னி பேருந்து உரிமையாளர்களிடம் இருந்து ரூ.9.65 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டதாக போக்குவரத்துத் துறை உயரதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் சென்னையில் வசித்து வருகின்றனர். இவர்கள் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி, பொங்கல், ஆங்கில புத்தாண்டு, கிறிஸ்துமஸ், ஆயுத பூஜை மற்றும் தொடர் விடுமுறை நாட்களின் போது தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சிலர் கூடுதல் கட்டணம் வசூல் செய்வார்கள்.

இந்நிலையில், சுதந்திர தினத்தையொட்டி மூன்று நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டது. இதேபோல் கடந்த 19ம் தேதி நாடு முழுவதும்  கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்பட்டது. இதையொட்டி, அரசு ஊழியர்கள் உள்பட  பெரும்பாலானோருக்கு ஆக.19,20,21 ஆகிய தேதிகளில் விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில் சில ஆம்னி பேருந்துகளில் மும்மடங்கு கட்டணம் வசூலிக்கப்பட்டதாக புகார் எழுந்தது.  இதையடுத்து போக்குவரத்துத் துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி, விதிமீறலில் ஈடுபட்ட ஆம்னி பஸ்உரிமையாளர்களிடம் இருந்து ரூ.9.65 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

Related Stories: