நீலமங்கலம் கிராமத்தில் நம்ம ஊரு சூப்பரு தூய்மை பணி-ஆட்சியர் துவக்கி வைத்தார்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம் நீலமங்கலம் கிராமத்தில் ஊரக வளர்ச்சி  மற்றும் உள்ளாட்சித் துறை சார்பில் நம்ம ஊரு சூப்பரு இயக்கத்தின் சார்பில்  விழிப்புணர்வு தூய்மை பணி முகாமினை மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் தொடங்கி  பார்வையிட்டு ஆய்வு செய்தார். நம்ம ஊரு சூப்பரு இயக்கத்தின் நோக்கமே பொதுமக்களிடையே பாதுகாப்பான சுகாதாரத்தையும் மற்றும் அவர்களுடைய வாழ்க்கை  தரத்தையும் மேம்படுத்திடவும், திட மற்றும் திரவக்கழிவினை முறையாக தரம்  பிரித்தல், ஒரு முறை பயன்படுத்கக்கூடிய நெகிழிகளை தவிர்த்து அதற்கு  மாற்றாக பயன்படுத்தக்கூடிய பைகளை பற்றி மக்களிடையே விழிப்புணர்வு  ஏற்படுத்துதல், பொதுமக்களிடையே சுகாதார குடிநீர் வழங்குதல், திரவக்கழிவு  மேலாண்மை தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்துதல், பொது இடங்களில் குப்பைகள் கொட்டுவதை தவிர்ப்பதன் மூலம் சுற்றுப்புறத்தினை பசுமையாகவும், சுத்தமாகவும்  வைத்திருக்க விழிப்புணர்வு ஏற்படுத்துவதுதான்.

இந்த தூய்மை பணி  முகாமில் பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் மாணவர்கள், இளைஞர்கள்  பங்கேற்று சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரித்து  நம்ம ஊரு சூப்பரு திட்டத்தினை முழுமையாக செயல்படுத்தி நமது மாவட்டத்தை  சுகாதாரமான மாவட்டமாக உருவாக்கிட பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு முழு  ஒத்துழைப்பு வழங்கிட வேண்டுமென மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.  இந்நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சி உதவி இயக்குநர்(ஊராட்சிகள்) ரத்தினமாலா,  வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நடராஜன், ரங்கராஜன், கள்ளக்குறிச்சி ஊராட்சி  மன்ற தலைவர்களின் கூட்டமைப்பு தலைவர் ஜெய்சங்கர், துணை தலைவர் அசோகன்  மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Related Stories: