பெருவாயல் டி.ஜெ.எஸ் மெட்ரிக் பள்ளி சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டியில் டி.ஜெ.எஸ் மெட்ரிக் பள்ளி சார்பாக நடைபெற்ற போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை டி.ஜெ.எஸ் கல்வி குழும தலைவர் ஜி.தமிழரசன் நேற்று துவக்கி வைத்தார். இதில் கிராம நிர்வாக அலுவலர் ஜோதி பிரகாசம், பேருர் செயலாளர் அறிவழகன், துணைத் தலைவர் கேசவன், மாவட்ட பிரதிநிதி இஸ்மாயில், கவுன்சிலர் காளிதாஸ், கறீம், முனுசாமி, கிளைச் செயலாளர் ராஜா முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக ஆர்.டி.ஓ. காயத்ரி சுப்பிரமணி, பொன்னேரி கல்வி மாவட்ட அலுவலர் எம்.மோகனா,  டிஎஸ்பி கிரியா சக்தி ஆகியோர் பங்கேற்றனர். பேரணியில் பங்கேற்ற மாணவர்கள் போதை ஒழிப்பு குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி புதிய பேருந்து நிறுத்தம் தொடங்கி ரெட்டம்பேடு கூட்டுச்சாலை வரைச்சொன்று மீண்டும் புதிய பேருந்து நிறுத்தும் வரை ஊர்வலமாக சென்றனர். அப்போது போதை ஒழிப்பின் அவசியம் மற்றும் போதையால் ஏற்படும் விளைவுகள் குறித்து கோஷங்களை எழுப்பினர்.

கொளுத்தும் வெயிலில் நடைபெற்ற இந்த போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்ற மாணவர்களை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர். புழல்:  சோழவரம் அடுத்த ஆத்தூர் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் போதைப் பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி நடைப்பெற்றது. இதில் ஊராட்சி மன்ற தலைவர் சற்குணன், சோழவரம் காவல் ஆய்வாளர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது போதை பொருள்களின் தீமைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. மேலும்,  திரைப்படங்களில் மது குடிப்பது போன்று வரும் தவறான பழக்கங்களை மாணவர்கள் பின்பற்ற வேண்டாம் என,சோழவரம் காவல் ஆய்வாளர் மாணவர்களுக்கு அறிவுறுத்தினார். பின்னர், போதைப் பொருள் ஒழிப்பு குறித்து உறுதி மொழி எடுத்து கொண்ட  300க்கும் மேற்பட்ட மாணவர்கள்,  உயர்நிலைப்பள்ளியில் இருந்து, ஆத்தூர் கிராம வீதிகளில் போதைப்பொருள் ஒழிப்பு குறித்த பதாகைகளுடன் விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர். இவர்களுடன் கிராம பெண்களும் கலந்து கொண்டனர்.

Related Stories: