கால்நடை கடத்தல் வழக்கு திரிணாமுல் தலைவர் ஜாமீன் மனு தள்ளுபடி

அசன்சால்: வங்கதேசத்துக்கு கால்நடைகள் கடத்தப்பட்ட வழக்கில் கைதான மேற்கு வங்க திரிணாமுல் காங்கிரஸ் பிரமுகரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

 வங்கதேசத்துக்கு கால்நடைகளை கடத்திய வழக்கில் பிர்பூம் மாவட்ட திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் அனுப்ரதா மண்டல் மீது கடந்த 2020ம் ஆண்டு  சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கின் விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு சிபிஐ 10 முறை சம்மன் அனுப்பியது.

இந்நிலையில், கடந்த 11ம் தேதி  அவரை அது கைது செய்தது. இந்நிலையில்,  இந்த வழக்கில் ஜாமீன் கோரி  சிபிஐ நீதிமன்றத்தில் அனுப்ரதா மனுதாக்கல் செய்தார்.‘அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டால்  சாட்சிகளை மிரட்டி ஆதாரங்களை அழிக்க வாய்ப்பு உள்ளது. எனவே, அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது,’என்று சிபிஐ எதிர்ப்பு தெரிவித்தது. இதை ஏற்ற நீதிபதி, அவரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து, மேலும் 4 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.

Related Stories: