அசாம்- மேகாலயா எல்லை பிரச்னை இன்று 2-ம் கட்ட பேச்சு

ஷில்லாங்: மேகாலயா-அசாம் இடையேயான எல்லை பிரச்னை குறித்து இரு மாநில முதல்வர்களும் இன்று 2ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். மேகாலயாவுக்கும், அசாமுக்கும் இடையே 50 ஆண்டுகளாக எல்லை பிரச்னை இருந்து வருகிறது. இரு மாநிலங்களின் எல்லையில் உள்ள பல கிராமங்களை, மேகாலயா உரிமை கோரியது. ஆனால் அதனை ஏற்க அசாம் மறுத்து வந்தது. இதற்கு தீர்வு காண இரு மாநில அமைச்சர்கள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டன. இந்தக் குழு, எல்லையை வரையறுக்கும் பணிகளில் ஈடுபட்டது. இறுதியில் எல்லைப் பிரச்னையைத் தீர்க்கும் வகையிலான வரைவு ஒன்றிய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அதன்படி, கடந்த மார்ச் மாதம் 29ம் தேதி டெல்லியில் உள்ள  உள்துறை அமைச்சக அலுவலகத்தில் அசாம், மேகாலயா  முதல்வர்கள் உடன்பாட்டில் கையெழுத்திட்டனர். இரு மாநிலங்களுக்கும் இடையே 884 கிமீ தொலைவிலான எல்லையில் இருக்கும் 12 இடங்களில் 6 பகுதிகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இந்நிலையில், எல்லை பிரச்னை தொடர்பான 2ம் கட்ட பேச்சுவார்த்தை  இன்று கவுகாத்தியில் நடக்கிறது.  இதில், மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மாவும், அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவும் கலந்து கொள்கின்றனர்.

Related Stories: