நியூசி.யை வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ்

பிரிட்ஜ்டவுன்: நியூசிலாந்து அணியுடனான முதல் ஒருநாள் போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து, முதலில்  விளையாடி டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடக்கிறது. பிரிட்ஜ்டவுனில் நடந்த முதல் போட்டியில்,  டாஸ் வென்ற  வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச... நியூசிலாந்து 45.2 ஓவரில்  190 ரன் மட்டுமே சேர்த்து ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக கேப்டன் கேன் வில்லியம்சன் 34 ரன் விளாசினார். பிரேஸ்வெல் 31, பின் ஆலன், சான்ட்னர் தலா 25 ரன், கப்தில் 24 ரன் எடுத்தனர்.

வெஸ்ட் இண்டீஸ் தரப்பில்  அல்ஜாரி ஜோசப், அகீல் உசேன் தலா 3, ஜேசன் ஹோல்டர் 2, கெவின் சிங்க்ளேர்,  யானிக் கேரியா தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

அடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் 39 ஓவரிலேயே 5 விக்கெட் இழப்புக்கு 193 ரன் விளாசி அபார வெற்றி பெற்றது. புரூக்ஸ் 79 ரன் (91 பந்து, 9 பவுண்டரி, 1 சிக்சர்), ஹோப் 26, கேப்டன் பூரன் 28 ரன் விளாசினர். பிளாக்வுட் 12, ஹோல்டர் 13 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். நியூசி. தரப்பில் போல்ட், சவுத்தீ தலா 2 விக்கெட், சான்ட்னர் 1 விக்கெட்  எடுத்தனர். ஆட்ட நாயகனாக ஷமார் புரூக்ஸ் தேர்வு செய்யப்பட்டார். வெஸ்ட் இண்டீஸ் 1-0 என முன்னிலை வகிக்க, 2வது போட்டி பிரிட்ஜ்டவுனில் இன்று இரவு 11.30க்கு தொடங்குகிறது.

Related Stories: