10 கிலோ கஞ்சா பறிமுதல்: இருவர் கைது

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடி வழியாக சென்னைக்கு  கஞ்சா கடத்துவதாக திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு  ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் கும்மிடிப்பூண்டி தனிப்படை சப் இன்ஸ்பெக்டர் மாரிமுத்து தலைமையில் மற்றும் போலீசார் ராஜசேகர் உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்டோர் தீவிரமாக கும்மிடிப்பூண்டி, சிப்காட், கும்மிடிப்பூண்டி பைபாஸ், கவரப்பேட்டை, சத்தியவேடு சாலை, ஆரம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.

அதனைத் தொடர்ந்து எளாவூர் ஒருங்கிணைந்த சோதனை சாவடியில் நேற்று சப் இன்ஸ்பெக்டர் மாரிமுத்து அரசு பேருந்துகள் ஒவ்வொன்றாக நிறுத்தி சோதனை மேற்கொண்டார். அப்போது ஆந்திரா அரசு பதிவு கொண்ட நெல்லூரில் இருந்து சென்னை செல்லும் பேருந்துகளில் சோதனை மேற்கொண்டனர். சோதனையின் போது சுமார் 10 கிலோ கஞ்சா இருந்து தெரியவந்தது. அப்போது இருவர் சந்தேகப்படும்படி இருந்தனர்.

அவர்களை கைது செய்து ஆரம்பாக்கம் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினர்.  அதில் அவர்கள் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த நீதிராஜன்(50),நாகர்கோயில் மாவட்ட சேர்ந்த அமோஸ்கான்மோசஸ்ஆல்பாட்ராஜ்(26) என தெரியவந்தது.பின்னர் ஆரம்பாக்கம் போலீசார்  இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories: